விஜய் சேதுதியை வைத்து ‘தர்மதுரை’ என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த சீனு ராமசாமி, தற்போது உதயநிதி மற்றும் தமன்னாவை வைத்து ‘கண்ணே கலைமானே’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் நடந்துக்கொண்டிருக்கும் நிலையில், சீனுராமசாமி அடுத்ததாக சமுத்திரக்கனியுடன் இணைய இருக்கிறார்.
இயக்குநர் மற்றும் நடிகர் என்று இரண்டிலும் தொடர் வெற்றிகளை குவித்து வரும் சமுத்திரக்கனி, எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்திப் போவதால் தற்போது பிஸியான நடிகராக கோலிவுட்டில் வலம் வருகிறார்.
இதற்கிடையே, சீனு ராமசாமி தனது அடுத்த படத்தில் சமுத்திரக்கனியை ஹீரோவாக்கியுள்ளார். இதனை சீனு ராமசாமி மற்றும் சமுத்திரக்கனி ஆகிய இருவரும் தெரிவித்துள்ள நிலையில், இப்படம் குறித்த பிற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...