150 க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக மட்டுமே நடித்து, ரஜினி, கமல் உள்ளிட்ட எந்த ஒரு நடிகரும் செய்திராத சாதனையை சினிமாத் துறையில் செய்திருக்கும் விஜயகாந்த், அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு நடிப்பதை தவிர்த்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற கலைத்துறையில் விஜயகாந்த் 40 ஆண்டுகள் பாராட்டு விழாவில், அவர் மீண்டும் நடிக்க வருவார், என்று அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளது, விஜயகாந்தின் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற விழாவில் திரைத்துறையை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டு விஜயகாந்தை வாழ்த்தி பேசியதோடு, அவருடன் பழகிய நினைவுகளையும் பகிர்ந்துக்கொண்டனர். விஜயின் அப்பாவும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் போது, விஜயகாந்த் மீண்டும் நடிக்க வேண்டும் என்று கூறியதோடு, “நானும் நீங்களும் அடுத்த வருடன் சேர்ந்து ஒரு படம் பண்றோம். இவர் தான் தயாரிப்பாளர்” என்று கூறி தயாரிப்பாளர் தாணுவை காட்டினார். அதே போல், இயக்குநர் ஆர்.கே.செல்வமணியும் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.
பிறகு பேசிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, “கலைத்துறை சீரழிந்துகொண்டிருப்பதை இங்கு பேசிய எல்லோரும் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். கேப்டனை வாழவைத்த கலைத்துறையை அழியவிடமாட்டார். கேப்டன் பழையபடி மீண்டும் நடிக்க வருவார்.” என்று தெரிவித்தார்.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...