1980 காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஓரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தொரட்டி. கிடை போட்டு வெட்ட வெளிகளில் பொழைப்பு நடத்தும் கீதாரி குடும்பங்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்தும் திரைப்படம் தான் தொரட்டி.
ராமநாதபுரத்தில் இருந்து கிடை போட்டு பொழைப்பு நடத்த வரும் ஓரு கீதாரி குடும்பத்தின் வாழ்க்கையில் வெந்த சோறு, சுட்ட கறி, பட்ட சாரம் இவற்றிக்காக எந்த பழி பாவத்தையும் செய்ய துடிக்கும் காவாலி கூட்டம் ஏற்படுத்தும் துடி துடிக்கும் நிகழ்வுகள் தான் தொரட்டி. இதில் மாயன் எனும் கதாபாத்திரத்தில் கதை நாயகனாக வாழ்ந்திருக்கிறார் ஷமன் மித்ரூ. இவருக்கு இணையாக செம்பொன்னு எனும் கதாபாத்திரத்தில் புதுமுகம் சத்யகலா மற்றும் நல்லையாவாக அழகு, சோத்து முட்டி, ஈப்புலி செந்தட்டி எனும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் தங்களின் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
சினேகனின் அற்புதமான கிராமிய வரிகளுக்கு வேத்சங்கர் மெட்டமைக்க பின்னணி இசையை ஜித்தின் ரோஷன் சிறப்பாக செய்ய, படத்தொகுப்பை ராஜா முகமது திறம்பட செய்ய, குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு பேசும்படி அமைந்து இருக்கிறது. ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வசனம் எழுதி இயக்கிருக்கிறார் பி.மாரிமுத்து.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...