‘ஒரு ஆடார் லவ்’ என்ற மலையாளப் படத்தின் டீசர் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் நடிகை பிரியா வாரியர். அந்த வீடியோவில் அவர் கண் சிமிட்டும் சில நொடிக் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. இதையடுத்து சமூக வலைதளங்களில் இந்திய அளவில் டிரெண்டிங்கான பிரியா வாரியர், பல பாலிவுட் நடிகர் நடிகைகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டார்.
மேலும், அவரை தங்களது படங்களில் நடிக்க வைக்க பல இயக்குநர்களும், நடிகர்களும் முயன்று வருகிறார்கள். பாலிவுட் பட வாய்ப்புகளும் பிரியா வாரியருக்கு கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில், பிரியா வாரியன் மற்றொரு கண் சிமிட்டல் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
சாக்லெட் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ள பிரியா வாரியர், அதில் ஒரு ஆடார் லவ் பட டீசரில் இடம்பெறுவது போல கண் சிமிட்டிக்கொண்டே சாக்லெட்டை சுவைக்கிறார். ஐபில் பின்னணி இசையோடு ஓடும் இந்த விளம்பரத்தில் அமிதாப் பச்சன் நடித்த படத்தின் வசனம் ஒன்றையும் பிரியா வாரியர் பேசியிருக்கிறார்.
நேற்று முதல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக தொடங்கியுள்ள இந்த விளம்பர வீடியோ மூலம் மீண்டும் ஒரு முறை பிரியா வாரியர் வைரல் நடிகையாகியுள்ளார்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...