விஷாலுடனான காதல், காதல் முறிவு, பாலியல் தொல்லை என அவ்வபோது சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார், ‘சேவ் சக்தி’ என்ற அமைப்பின் மூலம் பெண்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருவதோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.
தற்போது. ‘சண்டகோழி 2’, ‘எச்சரிக்கை’, ‘கன்னிராசி’, ‘சக்தி’, ‘மிஸ்டர்.சந்திரமெளலி’ உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் வரலட்சுமி, இந்த ஆண்டு அதிக படங்களில் நடிக்கும் நடிகை என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில், விஜயின் 62 வது படத்தில் நடித்து வரும் வரலட்சுமி, அப்படத்தில் அரசியல்வாதி வேடத்தில் நடிக்கிறாராம். ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் படத்தில் அரசியல்வாதி வில்லன்களாக நடிக்க, இவர்களுடன் வரலட்சுமியும் அரசியல்வாதி வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...