விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான ‘மெர்சல்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு, வசூலில் பல சாதனைகள் படைத்தது. இப்படத்தில் இடம்பெற்ற அரசியல் வசனங்களினால் பெரும் சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அளவில் மெர்சல் திரைப்படமும், நடிகர் விஜயுடம் கவனிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் மட்டும் இன்றி வெளிநாடுகள் பலவற்றிலும் வெற்றிகரமாக ஓடிய ‘மெர்சல்’ படத்திற்கு சிறந்த வெளிநாட்டு படம் என்ற தலைப்பில், இங்கிலாந்து நாட்டின் தேசிய விருதும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம் இப்படத்திற்கு கிடைத்துள்ளது. கொரியாவில் நடைபெற உள்ள Bucheon International Fantastic Film Festival (BIFAN) என்ற திரைப்பட விழாவில் திரையிட ‘மெர்சல்’ படத்திற்கு அழைப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜயின் ‘மெர்சல்’ படம் தமிழகத்தில் மட்டும் இன்றில், சர்வதேச அளவிலும் அங்கீகாரத்தை பெற்று வருவது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...