திருமணத்திற்குப் பிறக்கு சில நடிகைகள் நடிப்பதை தவிர்த்து வருகிறார்கள். அப்படியே அவர்கள் நடிக்க வந்தாலும் பெரும்பாலும் அவர்களுக்கு அக்கா, அண்ணி உள்ளிட்ட குணச்சித்திர வேடங்கள் தான் கொடுக்கப்படுகிறது. அதையும் மீறி ஒரு சில நடிகைகளுக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து விடுகிறார்கள்.
சமீபத்தில் திருமணமான நடிகை சமந்தா கூட, திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்தாலும், ஹீரோக்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதில்லை, என்ற கண்டிஷனோடு தான் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தான் நிர்வாணமாக நடித்தாலும், எனது கணவர் எதுவும் சொல்ல மாட்டார், என்று கூறி தமிழ் நடிகை ஒருவர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
‘மூன்று பேர் மூன்று காதல்’, ‘ஜெய்ஹிந்த் 2’ ஆகிய தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் சர்வின் சாவ்லா. இந்தி, தெலுங்கு மற்றும் பஞ்சாபி என பல மொழித்திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்சய்தக்கர் என்பவரை ரகசிய திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சர்வின் சாவ்லாவிடம், திருமணத்திற்குப் பிறகு முத்தக் காட்சிகளில் நடிப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தவர், “என் கணவர் எனது நடிப்பு தொழிலில் என்றுமே தலையிட மாட்டார். நான் முத்தக் காட்சிகளில் நடித்தாலும் சரி, ஏன் கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடித்தாலும் சரி அவர் எதுவும் சொல்ல மாட்டார். காரணம் என்னை பற்றியும், என் சினிமா தொழிலைப் பற்றியும் அவர் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...