பிரபல காமெடி நடிகர் அல்வா வாசு, உடல் நலக்குறைவு காரணமாக சீரியசான நிலையில் இருக்கிறார். தற்போது மரணத்தில் விளிம்பில் இருக்கும் அவர், மதுரையில் உள்ள தனது வீட்டில் இருக்கிறார். அவரது குடும்பத்திற்கு பண உதவி செய்யுமாறு நடிகர் சங்கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டதோடு, அவரது வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் சங்க செயலாளர் விஷாலின் முயற்சியால் நடிகர் சங்கத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் உடனடி செலவுக்காக, அனைவரின் ஒப்புதல் பெற்று, வாசுவின் குடும்பத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடிகர் சங்க செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் தனிப்பட்ட முறையில் நிதி உத்யவி வழங்க உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...