கடந்த 47 நாட்களாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று முன் தினம் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகள், புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியவை வரும் 20 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்க இருக்கிறது.
இந்த போராட்டத்தின் காரணமாக கடந்த 47 நாட்களாக தமிழ் சினிமாவில் எந்த புதிய திரைப்படங்களும் வெளியாகமல் இருந்ததால், தற்போது ரிலிஸுக்கு ஏகப்பட்ட படங்கள் காத்திருக்கின்றன. இருந்தாலும், அவற்றை வரிசைப்படுத்தி வாரத்திற்கு மூன்று புதிய படங்களை மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதையடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபு தேவா நடித்திருக்கும் ‘மெர்க்குரி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனுடன் மேலும் சில படங்களும் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே சமயம், 27 ஆம் தேதி வெளியாவதாக இருந்த ரஜினிகாந்தின் ‘காலா’ ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...