Latest News :

வசந்த் ரவிக்கு வில்லனாகும் இயக்குநர் மிஷ்கின்!
Thursday April-19 2018

’தரமணி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான வசந்த் ரவி, தனது முதல் படத்திலேயே அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார். தற்போது இரண்டாம் படத்திற்கு தயாரகியுள்ள அவர், அறிமுக இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

 

இயக்குநர் தியாகராஜ குமாரராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அருண் மாதேஷ்வரன், ’இறுதிசுற்று’ படத்திற்கு வசனம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆர்.ஏ ஸ்டுடியோஸ் சார்பாக சி.ஆர்.மனோஜ்குமார் தயாரிக்கும் இப்படம் பிரம்மாண்ட ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகிறது. இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் ஒவ்வொன்றையும் வித்தியாசமான வகையில் காட்டுவதற்காக திலீப் சுப்பராயண் மாஸ்டர் பல புதிய யுக்திகளை கையாண்டு வருகிறாரம்.  தர்புகா சிவா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை வைரமுத்து, கபேர் வாசுகி ஆகியோர் எழுதுகிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, நாகூரான் படத்தொகுப்பு செய்கிறார். ராமு கலை துறையை கவனிக்கிறார்.

 

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Related News

2434

’படையாண்ட மாவீரா’ படத்தை வீழ்த்த பலர் மறைமுகமாக செயல்படுகிறார்கள் - இயக்குநர் வ.கெளதமன் வருத்தம்
Wednesday September-10 2025

வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...

’பாம்’ படம் மூலம் காமெடியில் கலக்க வரும் அர்ஜுன் தாஸ்!
Monday September-08 2025

’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...

Recent Gallery