Latest News :

பிரபல நடிகையின் முகத்தை குதறிய நாய் - படப்பிடிப்பில் பரபரப்பு!
Thursday April-19 2018

பாலியல் தொல்லைக்கு எதிராக தெலுங்கு சினிமாவில் நடிகைகள் போராடி வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நடிகை ஒருவரது முகத்தை நாய் கடித்துவிட்ட சம்பவம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பாலிவுட் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருபவர் ரீனா அகர்வால். படங்களில் சின்ன வேடங்களில் நடித்தாலும் சீரியல்களில் முன்னணி வேடங்களில் நடித்து வரும் இவர், அங்கு பிரபலமான நடிகையாக உள்ளார்.

 

இந்த நிலையில், ‘க்யா ஹால் மிஸ்டர் பாஞ்சால்’ (Kya Haal Mister Panchal) என்ற சீரியலில் நடித்து வரும் ரீனா அகர்வால், அந்த சீரியலின் படப்பிடிப்பில் சமீபத்தில் கலந்துக்கொண்டார். அப்போது நாய் ஒன்றை வைத்து படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்த போது, திடிரேன்று அந்த நாய் அவரது முகத்தை மிக மோசமாக கடித்துள்ளது.

 

உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு முகத்தில் சில தையல்கள் போட்டதோடு, ஒரு மாதம் ஓய்வு எடுக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related News

2435

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

மே 15 ஆம் தேதி வெளியாகும் ‘எக்ஸாம்’ (Exam) தொடர்!
Monday April-27 2026

வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...

Recent Gallery