கடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோயினாக வலம் வரும் நயந்தாரவிடம், சுமார் 6 படங்கள் கையில் இருக்கின்றன. அத்துடன் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நடித்து வருபவர், மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே மற்றொரு மலையாளப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நயந்தாரா, தற்போது மலையாள சினிமாவுக்கு அதிகமாக ஈடுபாடு கொடுக்க தொடங்கியுள்ளார். காரணம், திருமணமான நடிகைகளுக்கும் ஹீரோயின் வாய்ப்பு கொடுப்பதோடு, நடிக்க ஸ்கோப் உள்ள கதாபாத்திரங்களை உருவாக்கி கொடுப்பதில் மலையாள சினிமா தான் நம்பர் ஒன்.
தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் நயந்தாரா நடித்து வந்தாலும், அவர் திருமணம் செய்துக்கொண்டால் இப்படிப்பட்ட பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்குமா? என்பது கேள்வி குறிதான். அதனால், திருமணத்திற்குப் பிறகும் ஹீரோயினாகவே நடிக்க விரும்பும் நயந்தாரா, மலையாள சினிமாவில் அதற்கான ஸ்கோப் இருப்பதால், திருமணத்திற்குப் பிறகு கேரளாவில் செட்டிலாகி மலையாளப் படங்களில் மட்டும் நடிக்க இருக்கிறாராம்.
இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வரும் நயந்தாரா, விரைவில் அவரை கல்யாணம் செய்துக் கொள்ள இருக்கிறாராம்.
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...