பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கை அழைப்பதற்கு எதிராக போராடி வரும் நடிகை ஸ்ரீரெட்டி, தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், நடிகைகள் பலர் படுக்கை அழைக்கும் பழக்கம் குறித்து வெளிப்படையாக பேசவும் தொடங்கியுள்ளார்கள்.
இந்த நிலையில், நடிகை ரம்யா நம்பீசன் படுக்கை அழைக்கும் பழக்கம் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து ரம்யா நம்பீசன் பேசுகையில், “திரையுலகில் உள்ள சில மோசமான விஷயங்கள் பற்றி என் சக நடிகைகளும், தோழிகளும் பேசியதை நான் மறுக்கப் போவது இல்லை. அதிர்ஷ்டவசமாக நான் அந்த தொல்லைக்கு ஆளாகவில்லை.
நான் என்ன செய்கிறேன் என்பதில் தெளிவாக உள்ளேன். எனக்கு ஏதாவது பிடிக்காவிட்டால் முடியாது என்று சொல்லும் பழக்கம் உள்ளது. ஆனால் என் தோழிகள் இந்த பிரச்சினைகளை சந்தித்துள்ளனர் என்பதை நினைக்கும் போது வெட்கமாக உள்ளது.
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் எனக்கு அப்படி நடக்கவில்லை என்கிறேன். இந்த பிரச்சினையை தீர்க்க இது குறித்து பேச வேண்டும். அதேபோல், இந்த பழக்கம் சினிமா துறையில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...