Latest News :

நடிகர் ஆர்யாவின் மச்சினிச்சி இயக்குநராகிறார்!
Friday April-20 2018

திருமணமே ஆகாத ஆர்யாவுக்கு மச்சினிச்சியா! என்று ஆச்சரியப்பட வேண்டாம். கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கலாபக்காதலன்’ படத்தில் ஆர்யாவின் மச்சினிச்சி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரட்டியவர் அக்சயா. அப்படத்தை தொடர்ந்து ‘உளியின் ஓசை’, ‘எங்கள் ஆசான்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர், தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

 

‘யாளி’ என்ற படத்தை இயக்கி நடித்து வரும் அக்சயா, இப்படத்தில் நடன இயக்குநராக பணியாற்றிய காதல் கந்தாஸ், சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலக, தற்போது நடன இயக்குநர் பணியையும் செய்து வருகிறார்.

 

தமன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் இரண்டாவது நாயகனாக புதுமுகம் அர்ஜூன் என்பவர் நடிக்க, இவர்களுடன் ஊர்வசி, மனோபாலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். 

 

எஸ்.ஆர்.ராம் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். ராமராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். எபி கிரியேஷன் சார்பாக டி.பாலச்சந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார்.

 

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படத்தின் இசையை மே மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதை தொடர்ந்து படத்தையும் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Related News

2442

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

மே 15 ஆம் தேதி வெளியாகும் ‘எக்ஸாம்’ (Exam) தொடர்!
Monday April-27 2026

வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...

Recent Gallery