இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிரபல பின்னணி பாடகியும் நடிகையுமான மீஷா ஷஃபிக்கு, பாடகர் அலி ஜாபர் செக்ஸ் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
சினிமாவில் பாலியல் தொல்லை குறித்து பல நடிகைகள் பேசுவதோடு, பத்திரிகைகளில் பேட்டியும் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், பிரபல பாகிஸ்தான் பாடகியும் நடிகையுமான மீஷா ஷஃபி, தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து கூறியுள்ளார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் மீஷ ஷஃபி, “நான் பிரபலமாக இருந்தாலும் ஒரு பெண்ணாக சில விஷயங்கள் பற்றி பேசுவது மிகவும் கடினமாக உள்ளது. அதிலும் குறிப்பாக பாலியல் தொல்லை. பிரபலமான பாடகியான எனக்கே இது நடந்தால் இந்த துறைக்கு வர விரும்பும் எந்த பெண்ணுக்கும் இது நடக்கலாம் என்பதே என் கவலை.
என் சக பாடகர் அலி ஜாபர் எனக்கு ஒன்று அல்ல பல முறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது நான் இந்த துறைக்கு வந்த புதிதிலோ அல்லது இளம் பருவத்திலோ நடக்கவில்லை. நான் பிரபலமான பிறகு, இரண்டு பிள்ளைகளுக்கு தாயான பிறகு நடந்துள்ளது.
பாலியல் தொல்லைக்கு ஆளானது எனக்கும், என் குடும்பத்தாருக்கும் மன வேதனையை அளித்துள்ளது. அலியை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். அவருடன் சேர்ந்து நான் பல மேடைகளில் பாடியுள்ளேன். அவரின் செயலால் அதிர்ச்சி அடைந்துள்ளேன்.” என்று அதில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...