Latest News :

புதுமுகங்கள் நடிக்கும் ‘சந்தோஷத்தில் கலவரம்’
Friday April-20 2018

ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் 'சந்தோஷத்தில் கலவரம் 'என்கிற இப்படத்தை திம்மா ரெட்டி  வி.சி. தயாரிக்கிறார்.

 

இப்படத்தைக் கிராந்தி பிரசாத்  இயக்குகிறார். இவர் பல விளம்பரப்படங்கள் , குறும்படங்களை இபக்கியவர்.  அவற்றுக்காக விருதுகளும் பெற்றவர் . திரைப்படக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற இவர் ,தெலுங்கில் சில இயக்குநர்களிடமும் திரைப்பாடம் பயின்றவர் . இருந்தாலும் படங்கள் பார்த்து கற்றவை அதிகம் . தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்து தமிழ் திரைச் சூழலை அறிந்து வைத்துள்ளார். இங்கே முகங்களை விட்டு விட்டு திறமைக்கு மட்டும்  தரப்படும்  மரியாதையை வைத்து  தமிழில் படம் இயக்க வந்திருக்கிறார் ' 

 

"ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என்பதே கதை. அதனால்தான் 'தீமைக்கும் நன்மைக்கும்  இடையில் நடக்கும் மோதல்  'என்று   டைட்டிலுடன் டேக் லைன் போட்டுள்ளோம் இது சஸ்பென்ஸ் த்ரில்லர் ரகப்படம்  என்றாலும் இதில் நட்பு ,காதல் , அன்பு  , காமெடி , ஆன்மிகம் எல்லாம் கலந்துள்ளன. 

உன்னையே நீ அறிவாய் உனக்குள் இருக்கும் இறைவன் உணர்வாய் , உன் உயரம் அறிவாய் என உரக்கச் சொல்கிறது படம்  "என்கிறார் இயக்குநர் கிராந்தி பிரசாத் .

 

நிரந்த் ,ருத்ரா அவ்ரா , ஆர்யன் , ஜெய் ஜெகநாத்  , ராகுல் சி .கல்யாண் , கெளதமி , செளஜன்யா , ஷிவானி ,அபேக்ஷா என இப்படத்தில்  புதுமுகங்கள் பலரும், ராவி மரியா வித்தியாசமான ரோலில்  நடித்துள்ளனர். 

 

படத்துக்கு ஒளிப்பதிவு பவுலியஸ் இவர் ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர். இப்படத்துக்காக அமெரிக்காவிலிருந்து வந்து பணியாற்றியுள்ளார். இவருடன் ஷிரவன்குமார் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை சிவநக் , பாடல்கள் கபிலன்  மணி அமுதன் , ப்ரியன் ,எடிட்டிங் கிராந்தி குமார். ஒலிப்பதிவு அருண் வர்மா இவர். ஆஸ்கார் புகழ் ரசூல் பூக்குட்டியின் மாணவர் . 

 

படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Related News

2445

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery