பென் கன்ஸ்டோரிடியம் நிறுவனம் சார்பில் டி.சிவகுமார் தயாரித்திருக்கும் படம் ‘பக்கா’. விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் நிக்கி கல்ராணி, பிந்து மாதவி ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். சூரி, சதீஷ், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவி மரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி, முத்துகாளை, சிசர் மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இவர்களுடன் படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் தயாரிப்பாளர் டி.சிவகுமார் நடித்திருக்கிறார்.
எஸ்.சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சி.சத்யா இசையமைக்க, யுகபாரதி, கபிலன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். கதி கலையை நிர்மாணிக்க, கல்யாண், தினேஷ் ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர். மிராக்கிள் மைகேல் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, சசிகுமார் படத்தொகுப்பு செய்துள்ளார். தயாரிப்பு நிர்வாகத்தை செந்தில்குமார் கவனிக்க, பி.சரவணன் இணை தயாரிப்பை மேற்கொண்டுள்ளார்.
எஸ்.எஸ்.சூர்யாவின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில், காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள ‘பக்கா’ வருகிற ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாகிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...