நடிகர் ஆர்யாவின் திருமணத்தை மையமாக வைத்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சிக்கு மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பினாலும், அமோக வரவேற்புடன் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக 16 பெண்கள் கலந்துக்கொள்ள இறுதியில் 3 பேர் தேர்வானார்கள். இவர்களில் ஒருவரை ஆர்யா திருமணம் செய்துக்கொள்வார் என்று நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் விளம்பரம் செய்தாலும், அனைவரும் யூகித்தது போல, ஆர்யா யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
இந்த நிலையில், இந்த நிகழ்ச்சி குறித்து முதன் முறையாக பேசியுள்ளார் இலங்கை பெண் சுசானா.
இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முதலில் எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள். எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வந்தேன் இப்போது உங்களுடைய அன்பை பெற்றிருக்கிறேன். 3 மாதம் நான் கொடுத்த உழைப்பு, நேரம் எல்லாம் வீண். ஆனால் இதிலிருந்து வெளிவந்த அடுத்த வேலையை பார்ப்பது நல்லது, உங்களுடைய அன்புக்கு நன்றி, என்று தெரிவித்துள்ளார்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...