Latest News :

விஜய் சேதுபதியின் படத்தை தயாரிக்கும் யுவன் சங்கர் ராஜா!
Monday April-23 2018

விஜய் சேதுபதியை வைத்து ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ என இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் எஸ்.யு.அருண்குமார், மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக அஞ்சலி நடிக்க, வில்லனாக லிங்கா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் விவேக் பிரசன்னா நடிக்கிறார்.

 

’பாகுபலி 2’ படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடேட் இணைந்து தயாரிக்கும் இப்படம் மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்ட படமாக உருவாக உள்ளது. இவர்கள் தற்போது ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பு செய்ய, கே.சிவசங்கர் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார்.

 

அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Related News

2458

ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகும் ‘கருப்பு பல்சர்’!
Friday January-16 2026

யாஷூ எண்டர்டெயின்மெண்ட் (Yasho Entertainment) சார்பில், Dr...

தாமதம் எங்களுக்கு புதுசு இல்ல - நடிகர் கார்த்தி
Tuesday January-13 2026

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

Recent Gallery