அரசியல் தலைவர்கள் பலர் சினிமாத் துறையுட நெருங்கிய தொடர்பில் இருந்தாலும், பா.ம.க நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், சினிமாத்துறையினருடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் ஒதுங்கியே இருக்கிறார். அவரது தொலைக்காட்சியான மக்கள் தொலைக்காட்சியில் கூட சினிமா நிகழ்வுகள் மற்றும் செய்திகள் ஒளிபரப்பப்படுவதில்லை.
இந்த நிலையில், ராமதாஸும் குடும்பமும் தமிழ் சினிமாவில் கால் பதிக்க தொடங்கியுள்ளது கோடம்பாக்கத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ராமதாஸின் பேரனும், டாக்டர் அன்புமணி ராமதாஸின் ஒன்று விட்ட சகோதரனுமான (cousin) குணாநிதி என்பவர், குறும்படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
‘ஏ ஸ்ட்ரோக் ஆப் டிஸ்ஸொனன்ஸ்’ (A Stroke Of Dissonance) என்ற அந்த குறும்படம் பல சர்வதேச திரை விழாக்களில் பங்கேற்றுள்ளது.
இது குறித்து பேசிய குணாநிதி, “சிறு வயதில் இருந்தே நடிப்பு பயிற்சி பட்டறையில் பங்கேற்றுள்ளேன். நடிப்பில் எனக்கு என்றுமே பேரார்வம் இருந்துள்ளது. தியேட்டர் லேட் சார்பில் நிறைய மேடை நாடகங்கள் மற்றும் வீதி நாடகங்களில் நடித்துள்ளேன். எனது இந்த ‘ஏ ஸ்ட்ரோக் ஆப் டிஸ்ஸொனன்ஸ்’ (A Stroke Of Dissonance) ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே கொண்ட முப்பது நிமிட குறும்படம். சரியான உந்துதல் கிடைக்காமல் தவிக்கும் ஒரு போராடும் வயலின் கலைஞனை பற்றிய ஒரு திரில்லர் கதை இது. இந்த கதாபாத்திரத்திற்காக ஜெர்மனியை சேர்ந்த ஒரு வயலின் கலைஞரிடம் நான்கு மாதங்கள் வயலின் பயின்றேன்.
எனது நடிப்பார்வத்திற்கு எனது குடும்பத்தினர் எனக்கு முழு ஆதரவு தந்துள்ளனர். எனது நடிப்பார்வத்தை பார்த்த எனது தாத்தா, நான் நடிப்பு பயிலும் பட்டறையில் சேர்ந்து முறையாக பயில வேண்டும் என்று எனக்கு அறிவுரை கூறினார். சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் மேலும் மேலும் பயின்று, தமிழ் சினிமாவில் கால் பதித்து எனது உழைப்பின் மூலம் வெற்றிபெற முனைப்போடு உள்ளேன்.” என்றார்.
மறைந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமாரின் மகன் ‘ராம்போ’ வெங்கட் இயக்கியுள்ள இக்குறும்படம் வெளியீட்டு நிகழ்வு நாளை சென்னையில் நடைபெற உள்ளது. இதில் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் கலந்துக் கொண்டு குறும்படத்தை வெளியிட உள்ளார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...