சரத்குமார், ஜோதிகா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் வில்லனாக நடித்தவர் மிலிந்த் சோமன். இப்படத்தை தொடர்ந்து கார்த்தியின் ‘பையா’ மற்றும் ‘அலெக்ஸ் பாண்டியன்’ ஆகியப் படங்களில் நடித்த இவர், பாலிவுட், தெலுங்கு ஆகிய சினிமாக்களில் பல படங்களில் நடித்து வருவதோடு, இந்தியாவின் பிரபல மாடலாகவும் இருக்கிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அங்கிதா கொன்வர் என்ற 26 வயது பெண்ணை காதலித்து வரும் மிலிந்த் சோமன், தற்போது அவரை திருமணம் செய்துக்கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக்கில் இவர்களது திருமணம் நேற்று நடந்து முடிந்துள்ளது. இதில் இருவீட்டாரது குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
ஏற்கனவே பிரெஞ்சு நடிகை மைலன் ஜம்பனோயை திருமணம் செய்துக்கொண்ட மிலிந்த் சோமன், அவரை கடந்த 2009 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...
ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...