கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்த 21 வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வென்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 3 ஆம் இடத்தை பிடித்தது.
இதில், தமிழக பளு தூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம் 77 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதிஷ் சிவலிங்கத்தை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சதீஷ்குமாரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும், அவருக்கு பரிசு ஒன்றையும் அவர் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அது என்ன பரிசு என்ற தகவலை இருவரும் வெளியிடவில்லை.
இது குறித்து சதீஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சிறந்த மனிதரை சந்தித்ததில் மகிழ்ச்சி. பதக்கத்துடன் அன்பரை சந்தித்தேன். அவரது அரவணைப்பு மற்றும் வார்த்தைகள் என்னை நிறைய ஊக்கப்படுத்தின. உங்களது அன்பாக பரிசுக்கு நன்றி சிவகார்த்திகேயன், என்று தெரிவித்துள்ளார்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...