ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி குறித்து அறிவிப்பார் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அவர் இன்று அமெரிக்கா புறப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று இரவு அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த், அங்கு சில நாட்கள் தங்கி மருத்துவ பரிசோதனை செய்ய உள்ளாராம். இதனால் அவரது அரசியல் கட்சி தொடங்கும் பணி தாமதமாகும் என்று தெரிகிறது.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பலவாறாக கருத்துக்கள் பரவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கான செயல்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளார்.
சென்னையில் வருகிற 25 ஆம் தேதி (புதன்கிழமை) ராகவேந்திரா மண்டபத்தில் புதிய நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். இதில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. கட்சி பெயர், கொடி, கொள்கைகள் போன்றவற்றையும் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
யாஷூ எண்டர்டெயின்மெண்ட் (Yasho Entertainment) சார்பில், Dr...
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி...