Latest News :

ஹீரோக்களால் தான் தயாரிப்பாளர்களுக்கு நஷ்ட்டம் ஏற்படுகிறது - ஞானவேல்ராஜா தாக்கு
Tuesday April-24 2018

அல்லு அர்ஜூன் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என்று மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் படம் ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’. இதில் சரத்குமார் வில்லனாக நடிக்க, அர்ஜுன் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். ஹீரோயினாக அணு இமானுவேல் நடித்திருக்கிறார். மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தை பிரபல கதையாசிரியர் வி.வம்சி எழுதி இயக்கியிருக்கிறார்.

 

வரும் மே 4 ஆம் தேதி அனைத்து மொழிகளிலும் வெளியாகும் இப்படத்தினை தமிழகத்தில் சக்திவேல் பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.

 

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, தெலுங்கு சினிமாவில் ஹீரோக்கள் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு தருவதுபோல தமிழ் சினிமாவில் தருவதில்லை. அவர்களால் தான் தமிழ் சினிமாவில் தயாராகும் படங்கள் நஷ்ட்டத்தை கொடுக்கிறது, என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

தொடர்ந்து பேசிய அவர், “தெலுங்கு சினிமாவில் ரூ.100 வியாபாரம் ஆகும் ஒரு ஹீரோ சம்பளமாக ரூ.15 கோடி மட்டுமே வாங்குவார். அதிலும், அட்வான்ஸாக ரூ.50 வாங்கிக்கொண்டு நடிக்க வந்துவிடுவார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் ரூ.100 கோடி வியாபாரம் ஆகும் ஹீரோ சம்பளமாக ரூ.50 கோடி கேட்பதோடு அட்வான்ஸாக ரூ.10 கோடி என பெரிய தொகையை கேட்பார்கள். இதனால் தான் தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் நஷ்ட்டத்தை ஏற்படுத்துகிறது.

 

தெலுங்கு சினிமாவில் நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். தெலுங்கு சினிமாவில் மேக்ஸிமம் அனைத்து படங்களும் லாபத்தை ஈட்டிவிடுகிறது. தொழிலும் சிறப்பாக இருக்கிறது. அந்த நிலை இங்கு வரவேண்டும் என்றால், ஹீரோக்கள் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அவங்க குறைந்த சம்பளம் வாங்குவதால், அங்கு படங்களை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்கள். அதனால் இந்தி டப்பிங் ரைட்ஸ் மிகபெரிய தொகைக்கு விலை போகிறது. ஆனால், தமிழ் சினிமாவில் பட்ஜெட்டில் பாதி நடிகர்களின் சம்பளமாக போய்விடுவதால், படத்தை தரமாக எடுக்க முடியவில்லை.

 

தற்போது நடைபெற்ற நடிகர்கள் சங்க கூட்டத்தில் நடிகர் கார்த்தி சம்பள குறைப்பு பற்றி பேசியிருப்பதாக கேள்வி பட்டேன். அதை நான் வரவேற்கிறேன். நடிகர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று ஒரு தயாரிப்பாளராகவும் நான் விஷாலுக்கு கோரிக்கை வைக்கிறேன். ஒன்று இரண்டு படங்களில் நடித்த காமெடி நடிகர்கள் கூட இங்கு ஒரு நாளை 2 லட்சம் சம்பளம் கேட்கிறார்கள். அப்படி ஒரு காட்சியை, சில நடிகர்களைக் கொண்டு எடுக்க வேண்டுமானால் குறைந்தது ரூ.15 லட்சம் நடிகர்களின் சம்பளமாக கொடுக்க வேண்டியுள்ளது. அப்படி கொடுத்தால் தான் அந்த காட்சியே எடுக்க முடியும் என்றால், ஒரு படம் முழுவதும் எந்த மாதிரியான நிலை இருக்கும் என்று யோசித்து பாருங்கள். இந்த நிலை மாறினால் தான் தமிழ் சினிமாவை காப்பாற்ற முடியும்.

 

நான் ஆந்திராவில் அலுவலகம் வாங்கி விட்டேன், இங்கே நிலமை சரியாகவில்லை என்றால், தெலுங்கு பக்கம் போகவேண்டியது தான். அங்கேயும் இதே கதையை தான் கேட்க போகிறோம், இதே படத்தை தான் பண்ண போகிறோம்.

 

‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால், அல்லு அர்ஜுன்னு ஏராளமான ரசிகர்கள் தமிழகத்திலும் இருக்கிறார்கள். அவரது நடனத்திற்காகவே அவரது படத்தை பார்க்க ரசிகர்கள் வந்துவிடுவார்கள். இந்த படம் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளோடு ரசிகர்களுக்கான படமாக உருவாகியிருக்கிறது. நிச்சயம் பெரிய வெற்றி பெறும்.” என்றார்.

Related News

2466

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery