Latest News :

அல்லு அர்ஜூனின் ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ மே 4 ஆம் தேதி ரிலீஸ்!
Tuesday April-24 2018

அல்லு அர்ஜூன், அணு இமானுவேல் நடிப்பில் உருவாகியுள்ள ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் வரும் மே 4 ஆம் தேதி ரிலீஸாகிறது.

 

கே.நாக பாபு வழங்கும் ராமலெட்சுமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீஷா ஸ்ரீதர் லகடபாடி தயாரித்திருக்கும் இப்படத்தை வி.வம்சி இயக்கியிருக்கிறார். ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு விஷால் - சேகர் இசையமைக்க, பா.விஜய், விஜய் பாலாஜி ஆகியோர் வசனம் எழுதியிருக்கிறார்கள். பாடல்கலை பா.விஜய் எழுதியிருக்கிறார். கோட்டகிரி வெங்கடேஷ்வர ராவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

 

அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரத்குமார் வில்லனாக நடித்திருக்கிறார். அர்ஜுன் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். இவர்களுடன் நதியா, பொம்மன் இரானி, சாருஹாசன், சாய்குமார், பிரதீப் ராவத், போசானி கிருஷ்ண முரளி, ரவி காலே உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

Related News

2467

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

மே 15 ஆம் தேதி வெளியாகும் ‘எக்ஸாம்’ (Exam) தொடர்!
Monday April-27 2026

வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...

Recent Gallery