Latest News :

வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் 31 வது ‘தமிழ் விழா’! - ஜூன் 29 ஆம் தேதி தொடக்கம்
Tuesday April-24 2018

வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் 31வது வது ‘தமிழ் விழா’ வருகிற ஜூன் மாதம் 29, 30, மற்றும் ஜூலை 1 ஆம் தேதி டெக்சாஸ் மாநிலத்தில், டல்லாஸ் நகரத்தில், ப்ரிஸ்க்கோ என்னும் நகரில் மூன்று நாட்கள் ‘மரபு , மகளிர் , மழலை’ என்ற தலைப்பில் மிகப்பெரும் விழாவாக நடைபெற உள்ளது.

 

இவ்விழா குழு செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை சென்னையில் நேற்று ஏற்பாடு செய்திருந்தது. இதில் மாண்புமிகு. மாபோ. பாண்டியராஜன் ( தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் ) , கல்வியாளர் , தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் , பேராசிரியர் முனைவர் கா. ஞானசம்மந்தன் , விஜிபி சந்தோசம் ,நடிகர் ஆர்.பாண்டியராஜ் , கால்டுவெல் வேல்நம்பி , மது சரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் சந்திப்பில் 

 

மாண்புமிகு அமைச்சர் மாபோ பாண்டியராஜன் பேசுகையில், “சிக்காகோ உலக தமிழ் மாநாடு 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இது அங்கீகாரம் பெற்ற 10வது உலக தமிழ் மாநாடு ஆகும். FETNA பேரவையின் 31வது தமிழ் விழா வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. இதன் அறிக்கையில் " செந்தமிழ் இருக்கை செய்வோம் " என்ற வாசகம் உள்ளது. அது எனக்கு மிகவும் பிடித்தது. தமிழ் மக்கள் யூதர்களுக்கு இணையானவர்கள். தமிழ் மக்களின் மக்கள் தொகை தமிழகத்தில் மட்டும் 71/2 கோடி உள்ளது ஆனால் தமிழ் மக்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள். உலக அளவில் யூதர்களுக்கு இணையாக தமிழ் மக்களின் மக்கள் தொகையும் உள்ளது.யூனஸ்க்கோ உலகத்தின் மதிக்க தகுந்த மொழிகளுள் தமிழுக்கு 14வது இடத்தை கொடுத்துள்ளது. நாம் தமிழை 14வது இடத்திலிருந்து 10வது இடத்துக்கு கொண்டுவரவேண்டும். உலகத்தில் முதலில் சிங்கப்பூர் தான் தமிழை தங்கள் ஆட்சி மொழியாக அறிவித்தது அதன் பின்னர் இலங்கை போன்ற நாடுகள் அறிவித்தன.

 

பண்டைய காலத்தில் தமிழர்கள்  நாடு பிடிக்க , வணிகத்துக்காக , மருத்துவத்துக்காக , தொழில்நுட்பத்துக்காக என நான்கு அலையாக தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்தனர். நமது புலம் பெயர்ச்சியின் வேர்கள் வித்யாசமாக இருக்கும். யூதர்கள் போல் நம்மை யாரும் விரட்டி அனுப்பவில்லை. Trinity School of Music வெஸ்டர்ன் இசைக்கு இருப்பது போல் இங்கே தமிழ் பண்பாட்டு மையம் ஒன்றை உருவாக்க வேண்டும். நாங்கள் research portal ஒன்றை உருவாக்க உள்ளோம். சிக்காகோ ஆறாவது நாடாக உலக தமிழ் மாநாட்டை நடத்துகிறது. அமெரிக்காவில் யூதர்களுக்கு பிறகு அவர்களுக்கு இணையாக அதிகமாக சம்பளம் வாங்கும் இனம் தமிழ் இனம் தான். நமது பெருமையை அமெரிக்கர்களுக்கும் , உலகத்துக்கும் புரிய வைக்க வேண்டும்.” என்றார்.

 

விழாவில் ஐசரி கணேசன் பேசுகையில், “Fetna  பேரவையின் 31வது விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் என்னோட கலந்துக்கொண்டிருக்கும் அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் மட்டும் இன்றைய தமிழக சட்டப்பேரவையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடிய ஒரே நபர் ஆவார். விஜிபி சந்தோசம் அவர்கள் தான் எந்த நாட்டுக்கு சென்றாலும் எங்கே ஒரு திருவள்ளுவர் சிலையை வைப்பவர் . அவருடைய சிறப்பே தனி சிறப்பு தான். தந்தையும் மகனும் சேர்ந்து படிக்கும் ஒரே பல்கலைகழகம் எங்கள் வேல்ஸ் பல்கலைகழகம் தான். ஆர்.பாண்டியராஜன் விரைவில் டாக்டர். பாண்டியராஜன் ஆக போகிறார்.” என்றார்.

 

விழாவில் விஜிபி சந்தோசம் பேசுகையில், “திருக்குறளுடன் தன்னுடைய பேச்சை ஆரம்பித்தவர் , " யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்று கணியன் பூங்குன்றனார் அவர்களின் வரிகளையும் கூறினார். தமிழ் என்றும் வாழ்ந்துக்கொண்டே இருக்கிறது. எல்லா நாடுகளிலும் தமிழ் சங்கம் உள்ளது. பெட்னா அமைப்பு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழர் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த வருடம் நானும் Fetna தமிழ் விழாவில் கலந்துகொள்ளப் போகிறேன்.” என்றார்.

 

நிகழ்ச்சியின் முடிவில் பெட்னா (Fetna) அமைப்புக்கும், தமிழக அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Related News

2470

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery