அரவிந்த்சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் கடந்த மாதமே வெளியாக இருந்த நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தினால் வெளியாகமல் இருந்தது.
இதற்கிடையே போராட்டம் முடிந்து வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மே 11 ஆம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், அரவிந்த்சாமி, அமலா பால் ஆகியோருடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா உள்ளிட்ட பலர் நடிக்க, வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்திருக்கிறார்.
அம்ரேஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்ய, ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார்.
ஹர்ஷினி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை பரதன் பிலிம்ஸ் தமிழகம் முழுவதும் வரும் மே 11 ஆம் தேதி வெளியிடுகிறது.
’அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ திரைப்படம் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனால் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படத்திற்கு திரையரங்க பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய நகைச்சுவை கலந்த குடும்ப படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை அனைத்து தரப்பு மக்களிடையும் கொண்டு போய் சேர்ப்பதற்காகவே, இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...