கடந்த ஆண்டு முதலே தமிழக அரசியல் குறித்தும், ஆட்சியாளர்கள் குறித்தும் விமர்சித்து வந்த கமல்ஹாசன், தான் அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். அரசியலே வேண்டாம், என்று கூறி வந்த கமல்ஹாசனின் அரசியல் எண்ட்ரி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
தான் அறிவித்தது போலவே ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், மாவட்டம் வாரியாக உறுப்பினர்கள் சேர்க்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார். கமலின் அரசியல் கட்சியில் சென்னையை சேர்ந்த தொழிலதிபர்கள் பலர் இணைந்திருப்பதோடு, சில நடிகர் நடிகைகளும் இணைந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், கமல் கட்சியில் முக்கிய பங்கு வகித்து வரும் நடிகை ஸ்ரீப்ரியா, கட்சியில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து மக்கள் நீதி மய்யம் தரப்பிலோ அல்லது ஸ்ரீப்ரியா தரப்பில் இருந்தோ இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர் நிலைக்குழு உறுப்பினரான வழக்கறிஞர் ராஜசேகரன், தனது சொந்த காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...