பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவர் அக்ஷய் குமார். ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்திருக்கும் இவர், தற்போது ’கேசரி’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புனே அருகில் உள்ள சதாரா மலைப்பிரதேசத்தில் உள்ள புத்ருக் என்ற கிராமத்தில் நடந்து வருகிறது.
நேற்று நடைபெற்ற படப்பிடிப்பில் ஹீரோ அக்ஷய் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட போது, அங்கு படப்பிடிப்புக்காக பயன்படுத்த வைத்திருந்த வெடிகுண்டுகள் எதிர்பாரதவிதமாக வெடித்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த குண்டுவெடிப்பால் படப்பிடிப்பில் தீப்பிடித்து பல லட்சம் ரூபாய் செலவில் போட்டிருந்த பிரம்மாண்டமான செட்டியும் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாம்.

பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அனைத்துள்ளனர். இந்த விபத்தில் படக்குழுவினர் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...