Latest News :

அரசியலில் இறங்கும் விஜய்! - ரசிகர்கள் ஏற்படுத்திய பரபரப்பு
Thursday April-26 2018

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் நேரடியாக அரசியலில் ஈடுபட தயாராகி வருகிறார்கள். ரஜினி, கமல், விஷால் ஆகியோர் ஏற்கனவே தங்களது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்திருக்கும் நிலையில், நடிகர் சிம்புவிடன் நடவடிக்கைகளும் அவரது அரசியல் நோக்கத்தையே காட்டுகிறது.

 

இதற்கிடையே, நடிகர் விஜயும் அரசியலில் ஈடுபடுவதற்காக ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது தனது ரசிகர்கள் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருபவர், தனது மன்றத்திற்கான புதிய நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் சேர்த்து வருகிறார்.

 

இந்த நிலையில், மதுரை விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதியன்று விஜய் முக்கிய முடிவு எடுக்கிறார் என்றும், தனது நீண்ட நாள் மெளனத்தை கலைக்கிறார் என்றும், பத்திரிகையில் செய்தி வெளியாவது போல டிசைன் செய்யப்பட்டிருக்கும் அந்த போஸ்டரில், ’தமிழகம் எங்கும் ரசிகர்கள் உற்சாகம்’, ’தமிழக மக்கள் மகிழ்ச்சி’, ’அரசியல் கட்சிகள் அதிர்ச்சி’ என்ற வாக்கியங்களும் இடம்பெற்றுள்ளன.

 

VijayFans

 

மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

Related News

2482

’படையாண்ட மாவீரா’ படத்தை வீழ்த்த பலர் மறைமுகமாக செயல்படுகிறார்கள் - இயக்குநர் வ.கெளதமன் வருத்தம்
Wednesday September-10 2025

வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...

’பாம்’ படம் மூலம் காமெடியில் கலக்க வரும் அர்ஜுன் தாஸ்!
Monday September-08 2025

’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...

Recent Gallery