கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் கவுசல்யா. தொடர்ந்து ‘நேருக்கு நேர்’, ‘பிரியமுடன்’, ‘சொல்லமலே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் 90 மற்றும் 2000 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தமிழ் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது 38 வயதாகும் கவுசல்யா, சில படங்களில் அண்ணி, அக்கா உள்ளிட்ட சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருவதோடு, டிவி நிகழ்ச்சிகள் சிலவற்றிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், கவுசல்யா திருமணம் செய்துக்கொள்ள திட்டமிட்டுள்ளாராம். விரைவில் தனது மனதுக்கு பிடித்தவரை தான் மணக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

தற்போது கேரளாவில் முகாமிட்டுள்ள கவுசல்யாவுக்கு, அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க தொடங்கியுள்ளார்களாம்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...