சினிமா வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்குவதற்கு முன்பாக வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ‘மேயாத மான்’. இப்படத்தில் ஹீரோயினாக நடித்த பிரியா பவானி ஷங்கருக்கு எந்த அளவுக்கு பாராட்டு கிடைத்ததோ அதைவிட அதிகமாகவே வைபவுக்கு தங்கச்சியாக நடித்த இந்துஜாவுக்கு கிடைத்தது.
ஒரு படத்தில் தங்கையாக நடித்தால் தொடர்ந்து அதுபோன்ற வேடங்களே தொடர்ந்து வரும் என்ற இமேஜை உடைத்து தற்போது பல படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் இந்துஜா, பிரபல நடிகருடன் காதல் வயப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
நடன இயக்குநராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய அவர், இந்தியாவின் நம்பர் ஒன் நடன இயக்குநர் என்று பெயர் எடுத்ததோடு, தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாக நடித்தவர், பிறகு இந்தியாவின் முன்னணி இயக்குநராகி, தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிகராக தனது பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்.
நடன இயக்குநர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என்று தமிழ் சினிமா மட்டும் இன்றி பாலிவுட்டிலும் பிரபலமாக இருக்கும் அந்த மனிதர், முன்னணி நடிகை ஒருவருடன் காதல் வயப்பட்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார். பிறகு அந்த நடிகையுடனான காதலை முறித்துக்கொண்டவர், பாலிவுட் நடிகை ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டார். பிறகு தமிழ் சினிமாவில் செவத்த புள்ள நடிகை ஒருவருடனும் இணைத்துப் பேசப்பட்டவர், தற்போது ‘மேயாத மான்’ இந்துஜாவிடம் காதல் வயப்பட்டிருப்பதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.
வசனம் இல்லாத ஒரு படத்தில் இருவரும் சேர்ந்து நடித்த போது, இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தீயாக பரவும் இந்த தகவலுக்கு இவர்கள் முற்றுப்புள்ளி வைப்பார்களா என்று பொருத்திருந்து பார்ப்போம்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...