Latest News :

சூர்யாவுக்கு வந்த சோதனை! - வருத்தத்தில் ரசிகர்கள்
Saturday April-28 2018

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, விஜய் மற்றும் அஜித் அளவிற்கு வசூல் ஹீரோ என்று பெயர் எடுக்கவில்லை என்றாலும், வித்தியாசமான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

 

இதற்கிடையே, சூர்யா தொடர்ந்து 5 தோல்வி படங்களைக் கொடுத்ததால் அவரது மார்க்கெட் தற்போது சரிவை நோக்கி சென்றுக்கொண்டிருப்பதாக சினிமா வியாபாரிகள் கூறி வரும் நிலையில், கடைசியாக வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படமும் படு தோல்வி அடைந்தது. ஆனால், அப்படத்தை வெற்றிப் படமாக காட்டுவதற்காக இயக்குநருக்கு சூர்யா கார் ஒன்றை பரிசளித்தார். அதே சமயம், அப்படம் சென்னையில் முதல் நாள் வசூலாக ரூ.74 லட்சத்தை வசூல் செய்தது. இது விஜய், அஜித் ஆகியோரது படங்களுக்கு பிறகு ஓரளவு நல்ல வசூல் என்று கூறப்பட்டது.

 

இந்த நிலையில், நேற்று வெளியான ஆங்கிலப் படமான Avengers: Infinity War சென்னையின் முதல் நாள் வசூலில் சூர்யாவை பின்னுக்கு தள்ளியுள்ளது. ஆம், உலகம் முழுவதும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வரும் இப்படம் சென்னையில் முதல் நாள் வசூலாக ரூ.78 லட்சம் வசூல் செய்துள்ளது.

 

எப்படிப்பட்ட பிரம்மாண்ட ஆங்கிலப் படங்களாக இருந்தாலும், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்ததில்லை என்ற நிலையில், Avengers: Infinity War படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் வசூலை முறியடித்ததால் சூர்யாவின் மார்க்கெட் அதள பாதாளத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் ரொம்பவே வருத்தமடைந்துள்ளார்களாம்.

Related News

2499

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘காந்தி டாக்ஸ்’!
Saturday March-07 2026

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...

’தடயம்’ இணையத் தொடரின் சாதனை வெற்றி! - கொண்டாடி தீர்த்த ஜீ5
Saturday March-07 2026

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5  பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...

கணிக்க முடியாத காலநிலை! - பிரியங்கா மோகனின் கொரியா அனுபவம்
Saturday March-07 2026

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...

Recent Gallery