பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதோடு, ஹாலிவுட் டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
பிரியங்கா சோப்ரா நடித்த ‘குவாண்டிகோ’ என்ற தொடர் அமெரிக்காவில் பெரும் பிரபலமடைந்தது. அதில் அலெக்ஸ் பாரிஷ் என்ற எப்.பி.ஐ அதிகாரியாக அவர் நடிக்கிறார். இந்த தொடரின் 3 வது சீசனின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி பிரியங்கா சோப்ரா படுகாயம் அடைந்துள்ளார். அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரியங்கா சோப்ரா, தொடர்ந்து படப்பிடிப்புல் கலந்துக்கொள்ளாத நிலைக்கு ஆளாகியுள்ளார். மேலும், அவரை மருத்துவர்கள் ஒரு மாதம் ஓய்வு எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்களாம். அதனால், பிரியங்கா சோப்ரா, தற்போது அந்த தொடரில் நடிப்பதை தவிர்த்துவிட்டு ஓய்வில் இருக்கிறாராம்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...