Latest News :

பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை ரெஜினாவின் கண்ணீர் பேட்டி!
Sunday April-29 2018

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘ராஜதந்திரம்’, ‘மாநகரம்’, ‘சரவணன் இருக்க பயமேன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் ரெஜினா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் கவனம் செலுத்தி வரும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ்டர்.சந்திரமெளலி’ திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில், ரெஜினா தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து பேட்டி ஒன்றில் கூறி கண்ணீர் விட்டு  அழுதுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து கூறிய ரெஜினா, “ஒரு நாள் சென்னையில் உள்ள ஈகா தியேட்டர் பாலத்தில் நண்பர்கள் சிலருடன் நடந்து சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது எதிரே வந்த இளைஞர் ஒருவர் திடீர் என தன்னுடைய உதட்டை பிடித்துவிட்டார். அந்த சம்பவம் தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்த சம்பவத்தில் இருந்து மீள எனக்கு சில நிமிடம் ஆனது. பின் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து தனக்கு தெரிந்த அத்தனை கெட்டவார்த்தைகளாலும் திட்டினேன்.

 

இந்த ஒரு முறை மட்டும் அல்ல, இதுபோல பல முறை நான் பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருக்கிறேன். அப்போதெல்லாம் கதறி அதுதது மட்டும் இன்றி, அவர்களை கண்டித்து அடித்தும் இருக்கிறேன்.” என்று கண் கலங்கியபடி கூறினார்.

Related News

2502

’படையாண்ட மாவீரா’ படத்தை வீழ்த்த பலர் மறைமுகமாக செயல்படுகிறார்கள் - இயக்குநர் வ.கெளதமன் வருத்தம்
Wednesday September-10 2025

வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...

’பாம்’ படம் மூலம் காமெடியில் கலக்க வரும் அர்ஜுன் தாஸ்!
Monday September-08 2025

’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...

Recent Gallery