‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியல் மூலம் பிரபலமான நடிகை ரச்சிதா, தனது உண்மையான பெயரை மறந்து மீனாட்சியாகவே வாழ்ந்து வருகிறார். இவரது ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் தற்போது ரசிகர்களின் பேவரைட் சீரியலாக சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, நடிகை ரச்சிதா அடுத்த சீரியலுக்கு தயாராகிவிட்டார். அதனால், அவரது ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் விரைவில் முடியப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய ரச்சிதா, நானும் என் கணவரும் இணைந்து புதிய சீரியல் ஒன்றில் நடிக்க இருக்கிறோம். தற்போதைக்கு இதை மட்டும் தான் கூற முடியும். அது என்ன சீரியல், எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது, என்பதை பொருமையாக அறிவிக்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.
ரச்சிதா மற்றும் அவரது கணவர் தினேஷ் கூட்டணியில் ஏற்கனவே உருவான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியல் மிகப்பெரிய வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, அவர்கள் இணையும் புது சீரியல் மீது ரசிகர்களுக்கு தற்போதே எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகனாக, தயாரிப்பாளராக 'ஒளடதம்' படத்தின் மூலம் அறிமுகமானார் நேதாஜி பிரபு...
யாஷூ எண்டர்டெயின்மெண்ட் (Yasho Entertainment) சார்பில், Dr...
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...