தனது அதிரடி ஆக்ஷன் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட புரூஸ்லி, குறைவான படங்களில் நடித்திருந்தாலும், இன்னமும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். இவரது ஆக்ஷனுக்கு அடிமையானவர்கள் பலர் இருக்க, அவர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது ‘புதிய புரூஸ்லி’ என்ற தமிழ்ப் படம்.
இப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் புரூஸ் ஷான் என்பவர், புரூஸ்லியின் வாரிசாக இருப்பாரோ! என்று எண்ண தோன்றும் அளவுக்கு அச்சு அசலாக புரூஸ்லியைப் போல இருக்கும் இவர், உருவத்தில் மட்டும் அல்லாமல் ஆக்ஷனிலும் புரூஸ்லியை அப்படியே பிரதிபலிக்கிறார்.
எஸ்.கே.அமான் பிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் வந்தவாசி கே.அமான் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முளையூர் ஏ.சோணை இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் நாயகன் புரூஸ் ஷான் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் இப்படம் குறித்து பேசிய இயக்குநர் முளையூர் ஏ.சோணை, “புரூஸ்லியின் ரசிகனான எனக்கு அவரைப்போல சாயல் கொண்ட புரூஸ் ஷானை பார்த்ததும் இப்படம் பண்ண ஆர்வம் பிறந்தது. மேலும், ஷான் கராத்தேயில் இரண்டு பிளாக் பெல்ட் வாங்கியவர் என்று தெரிந்ததும் எனக்கு கூடுதல் பலமாக இருந்தது. கதையை உருவாக்கினேன்.
கிராமத்தில் இருக்கும் கதாநாயகன் ஒரு பாதிப்பில் தன் குடும்பத்தை இழக்கிறான். மன ஆறுதலுக்காக நகரத்தில் உள்ள தூரத்து உறவினரான மாமா வீட்டிற்கு அழைத்து வரப்படுகிறான். அங்கு அவரது மாமா ஒரு இடப்பிரச்சினையில் சிக்கி இருப்பதை தெரிந்து அப்பிரச்சினையை தனது அடிதடியால் தீர்த்துவைத்து பின் தனது ஊருக்கே திரும்பி விடுவதே இந்த படத்தின் கதை.
கதையின் நாயகனாக ஷான் இருந்தாலும் எனக்கு நினைவில் இருந்ததெல்லாம் நான் நேசிக்கும் புரூஸ்லியே. அவர் நடை உடை பாவனை அவர் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் அனைத்தையும் நான் ரசித்தளவிற்கு ஷானிடம் இருந்து வெளிக் கோண்டிரு வந்திருக்கிறேன். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் ஷான் செயல்படும் விதத்தை பார்த்தால், புரூஸ்லியை பார்ப்பது போல தான் இருக்கும். இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் புரூஸ்லியை மீண்டும் பார்த்த திருப்தி அடைவார்கள்.” என்றார்.
செளந்தர்யான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மூன்று பாடல்களையும் இயக்குநர் ஏ.சோணையே எழுதியிருக்கிறார்.
தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம்...
இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த 'அறுவடை' திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்...
அமேசான் மியூசிக், உன்னதமான இசையைக் கண்டடைந்த ஒரு புதிய ஆண்டைத் தொடங்கும் விதமாக, 2026 ஆம் ஆண்டு மற்றும் அதற்க்கும் மேலாக பல ஆண்டுகளாக தாக்கத்தை விளைவிக்கக் கூடியவர்களாக எதிர்பார்க்கப்படும் வளர்ந்துவரும் இசைக் கலைஞர்கள் அடங்கிய தனது ஸ்ட்ரீமிங் சேவைகளின் “அமேசான் மியூசிக்: 2026 கவனிக்கத்தக்க கலைஞர்கள்” வருடாந்திர பட்டியலை இன்று அறிவித்துள்ளது...