Latest News :

அஜித் பிறந்தநாளில் அவரைப் பற்றிய ருசிகர தகவல் வெளியிட்ட சுசீந்திரன்!
Tuesday May-01 2018

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் அஜித்குமாருக்கு சினிமா துறையைச் சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிரபல இயக்குநர் சுசீந்திரன், வாழ்த்துக்களோடு, அஜித் பற்றிய ருசிகர தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

 

இது குறித்து டிவிட்டரில் சுசீந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், “நான் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருக்கும் போது எனது நண்பன் உதவி இயக்குநர் ரோஜா ரமணன் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.

 

அவனது அறுவை சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் தேவைப்பட்டது. நானும், எனது நண்பர்களும் சேர்ந்து சினிமா துறையில் உள்ள அனைவரிடமும் பண உதவி பெற்றோம். அப்பொழுது தான் முதன் முதலில் ஜனா படத்தின் படப்பிடிப்பில் இருந்த அஜித் சாரை சந்தித்தேன்.

 

ரோஜா ரமணனின் நிலையை கூறினேன். அப்பொழுதே முகம் தெரியாத சகதொழிலாளிக்கு அதிக பணம் கொடுத்து உதவியவர் அஜித் சார் தான். அன்று முதல் அஜித் சார் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. அஜித் சாருக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

 

சுசீந்திரனின் இந்த பவுக்கு வரவேற்பு தெரிவித்து வரும் அஜித் ரசிகர்கள், இந்த நல்ல மனதுக்காக தான் அஜித்தை நாங்கள் கொண்டாடுகிறோம், என்று தெரிவித்துள்ளனர்.

 

 

Related News

2519

’லவ் இங்க்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!
Monday February-17 2025

எம்ஆர் பிக்சர்ஸ், தயாரிப்பாளர் ஏ...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராஸி’!
Monday February-17 2025

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ‘மதராஸி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...

”தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதே என் ஆசை” - ‘மிக்ஸிங் காதல்’ நாயகி சம்யுக்தா வின்யா
Saturday February-15 2025

பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ ஐயப்பா மூவிஸ் நிறுவனங்கள் சார்பில் பொள்ளாச்சி எஸ்...

Recent Gallery