உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரபல காமெடி நடிகர் அல்வா வாசு நேற்று இரவு 10.25 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57.
இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த அல்வா வாசு, ‘அமைதிப்படை’ படத்தில் சத்யராஜுக்கு உதவியாளர் வேடத்தில் நடித்ததன் மூலம் நடிகரானார். அதை தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து வந்த அவர் சுமார் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதற்கிடையே கடந்த ஆறு மாதமாக கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு, சிகிச்சை பலன் அளிக்கவில்லை என்று நேற்று முன் தினம் மருத்துவர்கள் கூறியதோடு, அவர் எப்போது வேண்டுமானாலும் உயிரிழக்கலாம், எனவவே அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுங்கள், என்றும் கூறிவிட்டனர்.
இதையடுத்து மதுரையில் உள்ள தனது வீட்டில் கடைசிச் நாட்களை எண்ணிக்கொண்டிருந்த அல்வா வாசு, நேற்று இரவு 10.25 மணிக்கு உயிரிழந்தார்.
அவரது இறுதிச் சடங்கு குறித்து விபரத்தை விரைவில் அறிவிக்க உள்ளதாக நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...