கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியான ஹீரோயினாக வலம் வந்த நிலையில், திடீரென்று படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இதனால், அவர் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் என்பவரை திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, நடிப்பதை காட்டிலும் லண்டன் மைக்கேலும் ஊர் சுற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் ஸ்ருதி ஹாசன், விரைவில் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க இருக்கிறாராம். தற்போது நடிப்பதற்காக கதை கேட்டு வருபவர், அப்படியே நல்ல கதைகளாக இருந்தால் சொந்தப் படம் தயாரிக்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.
லண்டனைச் செர்ந்த மைக்கேல் தனது நல்ல நண்பர், என்று கூறியுள்ள ஸ்ருதிஹாசன், தற்போது வரை திருமணம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. அப்படி திருமணம் செய்துகொள்ள விரும்பினால், அதை அறிவித்துவிட்டு தான் செய்வேன், தனது வாழ்வில் எந்த ரகசியமும் இல்லை, என்றும் கூறியுள்ளார்.
பிகைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் (Behindwoods Productions) தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ...
இந்திய திரைப்படத் துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் புரட்சிகரமான புதிய தளம் ‘இந்தியன் பிலிம் மார்க்கெட்’ (INDIAN FILM MARKET)...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன்...