இயக்குநர் சிவா - அஜித் கூட்டணியில் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என்று மூன்று படங்கள் தொடர்ந்து வெளியானாலும், மூன்றில் ஒன்று கூட சூப்பர் ஹிட் ஆகவில்லை. முதல் இரண்டு படங்கள் சுமார் என்ற நிலையில், மூன்றாவது படமான ‘விவேகம்’ படு தோல்வியை சந்தித்ததோடு, விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பெரும் பின்னடைவையும் சந்தித்தது.
இதற்கிடையே, விவேகம் படத்தினால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட இழப்பீட்டை சரிக்கட்டுவதற்காக, அவருக்கே மீண்டும் கால்ஷீட் கொடுத்திருக்கும் அஜித், அப்படத்தை இயக்கும் வாய்ப்பை மீண்டும் சிவாவுக்கே கொடுத்திருக்கிறார். அதன்படி சிவா - அஜித் கூட்டணியில் 4 வது படமாக உருவாகிறது. ‘விஸ்வாசம்’. அஜித்தின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், இந்த முறை எப்படியாவது ஜெயித்து விட வேண்டும், என்று இயக்குநர் சிவா ரொம்பவே கவனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒன்றை சரி செய்வதற்கான படமாக ‘விஸ்வாசம்’ உருவாவதால் இப்படம் அஜித்துக்கு ஸ்பெஷலான படமாக இருக்க முடியாது. ஆனால், அஜித்தைக் காட்டிலும் அப்படத்தில் நடிக்கும் வேறு ஒரு நடிகருக்கு ‘விஸ்வாசம்’ ரொம்ப ஸ்பெஷலாக அமைந்துவிட்டது.
ஆம், சமீபகாலமாக தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக உருவெடுத்து வரும் யோகி பாபுவுக்கு விஸ்வாசம் ஸ்பெஷல் படமாக அமைந்துவிட்டது. அவரது 100 வது படம் தான் ‘விஸ்வாசம்’.

இந்த தகவல் வெளியானதில் இருந்து யோகி பாபுவுக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருவதோடு, இதன் மூலம் யோகி பாபு சமூக வலைதளங்களில் டிரெண்டாகவும் ஆகி வருகிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...