Latest News :

நடிகருடன் காதலா? - இந்துஜாவின் பதில் இதோ!
Wednesday May-02 2018

‘மேயாத மான்’ படத்தில் ஹீரோவுக்கு தங்கை வேடத்தில் நடித்து அனைவரிடமும் பாராட்டு பெற்றவர் இந்துஜா. அண்ணனுடன் இவர் சேர்ந்த அந்த படத்தில் போட்ட குத்தாட்டத்தால் ஒட்டு மொத்த கோடம்பாக்கமே அதிர்ந்துப் போனது.

 

தற்போது ஹீரோயினாக பல படங்களில் நடித்து வரும் இந்துஜா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மெர்க்குரி’ படத்தில் நடித்து தனது நடிப்பு திறமையால் அனைவரையும் வியக்க வைத்தார்.

 

இதற்கிடையே, இந்துஜா பிரபல நடிகரும் நடன இயக்குநருமான ஒருவரை காதலிப்பதாக தகவல் வெளியானது. படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்த இவர்கள், தற்போது ஒன்றாக சேரப்போவதாகவும் கூறப்படுகிறது. அந்த நடிகர் மற்றும் நடன இயக்குநருக்கு இதற்கு முன்பு பல காதல் இருந்ததோடு, தனது மனைவியை விவாகரத்தும் செய்தவர். இந்துஜாவின் இந்த காதல் செய்தி கோடம்பாக்கத்தில் தீயாக பரவி வருகிறது.

 

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட இந்துஜாவிடம், இந்த காதல் விவகாரம் குறித்து கேட்டதற்கு, “அப்படியா...என்ன செய்து அது...சொல்லுங்க” என்றார். விஷயத்தை சொன்னதும், ”அதுவா...அட போங்க..” என்று அதை ரொம்ப கூலாக எடுத்துக் கொள்கிறார்.

 

இந்துஜா இந்த கேள்வியை எடுத்துக்கொண்ட விதத்தைப் பார்த்தால், அவரைப் பற்றிய காதல் வதந்தி உண்மை தானோ, என்று நினைக்க தோன்றுகிறது.

Related News

2524

ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகும் ‘கருப்பு பல்சர்’!
Friday January-16 2026

யாஷூ எண்டர்டெயின்மெண்ட் (Yasho Entertainment) சார்பில், Dr...

தாமதம் எங்களுக்கு புதுசு இல்ல - நடிகர் கார்த்தி
Tuesday January-13 2026

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

Recent Gallery