Latest News :

60 ரூபாயில் அற்புத கொண்டாட்டமாக வாட்டர் வேர்ல்டு! - நடிகை இந்துஜா தொடங்கி வைத்தார்
Wednesday May-02 2018

கோடை விடுமுறை துவங்கிவிட்டது. சென்னையை பொறுத்தவரை கோடை விடுமுறை என்றாலே தீவுத்திடலில் பிரமாண்டமாக நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சி தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். அந்தவகையில் சென்னையின் இந்த வருட கோடை விடுமுறை கொண்டாட்டமாக SSM பில்டர்ஸ் & புரமோட்டர்ஸ் தீவுத்திடலில் நிறுவியுள்ள  வாட்டர் வேர்ல்டு (Water World ) தான் இருக்கப்போகிறது.. 

 

இதற்கான துவக்கவிழா நேற்று சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மேயாத மான், மெர்க்குரி படங்களில் நாயகியாக நடித்த இந்துஜா, திரு. பி. வில்சன் - சீனியர் கவுன்சில் & பார்மர் அட்வோகேட் ஜெனரல்(Senior Counsel and Former Advocate General), திரு. தியாகராஜன் -  SSM பில்டர்ஸ் & புரமோட்டர்ஸ் மற்றும் திரு. போஸ் பாண்டி - திரைப்பட தயாரிப்பாளர்  ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய இசையமைப்பாளரும் விகோஷ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளருமான சாம் டி ராஜ்  இந்த வாட்டர் வேர்ல்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து விரிவான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

 

“இதற்கு முன் இதே தீவுத்திடலில் 18 வருடங்களுக்கு முன் Snow Show ஆரம்பித்ததும், ஆறு வருடங்களுக்கு முன் நயாகரா அருவியை இங்கே கொண்டுவந்ததும் நாங்கள் தான். அந்தவகையில் இந்த வருடம் இரண்டாவது முறையாக இந்த  வாட்டர் வேர்ல்டு (Water World)ஐ களமிறக்கியுள்ளோம்.

 

இந்தமுறை சென்னை வெயிலின் உக்கிரத்தை தணிக்கும் விதமாக வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக ராட்சத நீர்வீழ்ச்சி இருக்கும் என்பதில் ஐயமில்லை.. நிஜ நீர்வீழ்ச்சியில் குளிப்பது போலவே இதிலும் ஆனந்தமாக குளிக்கலாம்.. அதையொட்டி அமைந்துள்ள நீச்சல் குளத்தில் நீந்தி மகிழலாம்.. நுழைவுக்கட்டணமான 6௦ ரூபாய் தவிர குளித்து மகிழ்வதற்கு என தனி கட்டணம் எதுவுமில்லை.. 

 

இவைதவிர படகு சவாரி, பனி விளையாட்டுக்கள் என இப்படி நீரை மையமாக வைத்து த்ரில்லிங்கும் பொழுதுபோக்கும் கலந்த 15க்கு மேற்பட்ட நீர் விளையாட்டுக்கள் பார்வையாளர்களை பரவசப்படுத்த காத்திருக்கின்றன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகவும் நேர்த்தியாக செய்துள்ளோம்.

 

இந்தமுறை ஐபிஎல் போட்டிகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டதன் காரணமாக இந்த பொருட்காட்சிக்கு சுமார் 3 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சினிமா தொடர்பான விழாக்கள், புரமோஷன் நிகழ்ச்சிகளையும் இதில் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.. மக்களுக்கு அவை கூடுதல் பொழுதுபோக்காக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை” என கூறினார்..

 

சிறப்பம்சமாக இந்தமுறை வழக்கமான ஜெயன்ட் வீல் மற்றும் அது சார்ந்த கொண்டாட்டங்கள் போல அல்லாமல், வாடிக்கையாளர்களுக்கு சலுகை தரும் விஷயமாக சத்யா எலெக்ட்ரானிக்ஸின் மின் சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் மேளா நடைபெற இருக்கிறது. இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் நிறுவப்பட்டுள்ளன.

 

இதற்கான ஏற்பாடுகளை போக்ஸ் லேண்ட் (Folks Land) கவனிக்க, சந்தைப்படுத்தும் பொறுப்பை விகோஷ் மீடியா (Vgosh Media) ஏற்றுக்கொண்டுள்ளது. லட்சுமண் ஸ்ருதியின் மியூசிக் ஸ்டால், விதவிதமான ஆடை வகைகள், உணவுப்பொருட்கள், மின் சாதனங்கள், குழந்தைகளை கவரும் விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றுக்கான கடைகள் (stalls) இதில் ஏராளமாக பிடித்திருக்கின்றன.

Related News

2528

’ஆண் பாவம் பொல்லாதது’ நாயகியை வர்ணித்த இயக்குநர் மிஷ்கின்!
Tuesday October-28 2025

Drumsticks Productions தயாரிப்பில், இயக்குநர்  கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ’ஜோ’ படத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, அழகான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் ’ஆண் பாவம் பொல்லாதது’...

விஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் 'டயங்கரம்' படம் தொடங்கியது!
Monday October-27 2025

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் டிஜிட்டல் திரை நட்சத்திரமும், 'டிராகன்' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவருமான வி ஜே சித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கும் 'டயங்கரம்' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எல் ஏ ஸ்டுடியோவில் சிறப்பாக நடைபெற்றது...

வியப்பில் ஆழ்த்தும் மாதவனின் புதிய மாற்றம்!
Monday October-27 2025

டிரைகலர் பிலிம்ஸ் உடன் இணைந்து வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள புரட்சிகர தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி...

Recent Gallery