உலக அளவில் ஓவியங்களின் மீது காதல் கொண்டவர்களுக்கு அன்று முதல் இன்று வரை எப்போதுமே நீங்காத வியப்பைத் தந்திருப்பவர் லியானர்டோ டா வின்சி. அவரது தூரிகையிலிருந்து பிறந்த 'மோனாலிசா' தான் இன்றளவிலும் இந்தப் பிரபஞ்சத்திற்கான கனவு அழகி. சற்று ஏறக்குறைய டா வின்சியின் ஓவியங்களுக்கு நிகராக ஒருவரது ஓவியங்கள் பேசுகிறது என்றால் அது நிச்சயம் ரவி வர்மாவின் ஓவியங்கள் தான்.
உலகோர் மத்தியில் இந்தியாவின் கலைப் பண்பாட்டை எடுத்துக் கூறும் ஒப்பற்றச் சான்றுகளாக நிலைத்திருக்கின்றன அவர் தீட்டி வைத்து விட்டுப் போன அத்தனை ஓவியங்களும். இப்படி உலகையே தன் வயப்படுத்தியிருக்கும் இரு துருவங்களின் ஓவியங்களைக் குழைத்து, புதியதோர் சித்திரமாக்கினால் அது எப்படி இருக்கும்?. இருவேறு நேரெதிர் கலாச்சாரம் ஒன்றாய் சேர்ந்து உயிர் பெருகையில் அது தரும் பிரமிப்பு எத்தகையதாய் இருக்கும்?. நினைக்கவே விழிகளை விரியச் செய்யும் இச்சிந்தனைக்கு, தனது தூரிகைகளால் உயிர் தந்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.
இந்தோ-இத்தாலிய உறவின் 70-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக ஏ.பி.ஸ்ரீதரின் ஓவியங்கள் “The Cadent Coalition” என்னும் தலைப்பில் புது டெல்லியில் உள்ள இத்தாலிய தூதரகத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இத்தாலிய தூதரகமும், இந்திய கலாச்சார மையமும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இக்கண்காட்சியின் தொடக்க விழா இன்று (02/05/2018) மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இதில் திரு.ரீவா கங்குலி தாஸ் (Director General, ICCR) மற்றும் திரு.லோரான்சோ ஏஞ்சலோனி (Ambassador Of Italy To India) ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
மேலும், இந்தியாவின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் இதில் கலந்து கொண்டு ஓவியர் ஏ.பி.ஸ்ரீதரை வாழ்த்தினர்.
03/05/2018 முதல் 31/05/2018 வரையிலும் நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில் ஒவ்வொரு நாட்களிலும் பல முக்கியமான கலையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் - தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் பத்திரிக்கையாளர் - ஊடகவியலாளர்களை சந்தித்தார்...
சங்கமித்ரன் புரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில், என்...
பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம்,விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் காதல் கதை சொல்லவா...