சூப்பர் ஹீரோக்களின் கூட்டணியின் உருவான ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ ஹாலிவுட் திரைப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என்று இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான இப்படத்திற்கு இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
திரையிடப்பட்ட முதல் நாளே சென்னையில் மட்டும் ரூ.70 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்த இப்படம், முன்னணி தமிழ் ஹீரோ ஒருவரது படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் முதல் நாளில் ரூ.40.13 கோடியை வசூலித்த இப்படம், இரண்டாம் நாளில் ரூ.39.1 கோடியும், 3 வது நாளில் ரூ.46.67 கோடியையும் வசூலித்திருக்கும் இப்படம் இந்தியாவில் மட்டும் இதுவரை சுமார் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாகவும், உலகம் முழுவதும் 5 நாட்களில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கோடை விடுமுறை என்பதாலும், தமிழ் சினிமாவில் முக்கியமான படங்கள் ஏதும் வெளியாகதாதாலும், தற்போதுவரை தமிழகத்தில் ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ மட்டுமே ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...