தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயினாக வலம் வரும் நயந்தாரா, அஜித், கமல், சிரஞ்சீவி என்று ஒரே நேரத்தில் மூன்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். அதே சமயம், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருபவர், ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்கும் படங்களுக்கு பல கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குநர் விஜயின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நயந்தாராவுக்கு சம்பளம் ரூ.5 கோடி பேசப்பட்டுள்ளதாம்.
விஜய் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘தியா’ வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து பிரபு தேவாவை வைத்து விஜய் இயக்கியுள்ள ‘லட்சுமி’ படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக இரண்டு புதிய படங்களை இயக்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். அதில் ஒரு படம் முழுக்க முழுக்க ஹீரோயின் கதையாம். இதில் தான் நயந்தாரா ஹீரோயினாக நடிக்கிறார்.
நயந்தாராவிடம் கதை சொல்லி, கால்ஷீட்டையும் விஜய் பெற்றுவிட்டாராம். இந்த படத்தில் நடிப்பதற்காக நயந்தாரா கேட்ட ரூ.5 கோடி சம்பளத்தை படக்குழுவினர் தர சம்மதித்துவிட்டார்களாம்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...