90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர் கவுசல்யா. விஜய், மம்மூட்டி உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்கலுடன் நடித்தவர், தற்போது அம்மா, அக்கா உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, 38 வயதாகும் கவுசல்யாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், அவருக்காக அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகி, அது வைரலாக பரவியது.
இந்த நிலையில், தனது திருமணம் குறித்து சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் கவுசல்யா, “எனக்கு திருமணம் என்ற செய்தி உண்மையல்ல. இந்த வயதுக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. தற்போதுவரை நான் பேச்சுலராக தான் வாழ்கிறேன். அது தான் எனக்கு பிடித்திருக்கிறது.
திருமணத்தின் மீது ஆர்வம் இருக்கிறது. ஆனால், உடனடியாக திருமணம் செய்துகொள்ள மாட்டேன். இன்னும் சில ஆண்டுகள் சந்தோஷமாக பேச்சுலர் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு பிறகு பார்ப்போம். இப்போதைக்கு எனக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.
கவுசல்யாவின் இந்த தகவல் அவரது ரசிகர்களைய அதிர்ச்சியடைய செய்துள்ளது.
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...