தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான அஜித் மற்றும் விஜய் ஆகியோரது ஒவ்வொரு படங்களின் ரிலீஸையும் அவர்களது ரசிகர்கள் பண்டிகைப் போல கொண்டாடுவார்கள். அவர்களது கொண்டாட்டம் ஒரு பக்கம் இருக்க, மோதலும் மறுபக்கம் கலைகட்டும்.
விஜயை பற்றி அஜித் ரசிகர்கள் மீம்ஸ் போடுவது, அஜித்தை பற்றி விஜய் ரசிகர்கள் மீம்ஸ் போடுவது என்று சமூக வலைதளத்தில் இவர்கள் மோதிக்கொள்ளுவதை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் ஒன்றாக இணைந்திருப்பதை பெரும்பாலானோர் அறிந்திருக்க மாட்டார்கள். அது தான் உண்மை.
விஜய் பிறந்தநாளை அஜித் ரசிகர்கள் கொண்டாடுவதும், அஜித் பிறந்தநாளை விஜய் ரசிகர்கள் கொண்டாடுவதும் ஒரு சில இடங்களில் நடந்துக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில், கடந்த 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் ஒன்றாக சேர்ந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள ‘அன்னை இல்லம்’ முதியோர் இல்லத்தில் கொண்டாடியுள்ளார்கள். அங்குள்ள முதியோருக்கு உணவு வழங்கி அவர்களுக்கான உடைகளையும் வழங்கியுள்ளார்கள்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...