Latest News :

தேசிய விருது வழங்கும் விழாவில் சர்ச்சை - விருது வாங்க மறுக்கும் தமிழ் கலைஞர்கள்
Thursday May-03 2018

கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட தேசிய திரைபப்ட விருதுகள் வழங்குவதற்கான விழா இன்று நடைபெற உள்ள நிலையில், நிகழ்ச்சியில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

 

வழக்கமான தேசிய திரைப்பட விருதுகளை ஜனாதிபதி தான் அனைவருக்கும் வழங்குவார். ஆனால், இந்த முறை அடையாளமாக 11 பேருக்கு மட்டுமே ஜனாதிபதி விருது வழங்குவார் என்றும், மற்றவர்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி விருதுகள் வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

விருது குழுவின் இந்த திடீர் முடிவால் விருது வென்றவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழ் திரைப்பட இயக்குநர் செழியன் உள்ளிட்ட விருது பெற உள்ள 69 பேர் விழாவில் பங்கேற்க போவதில்லை என்று தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

 

அந்த கடிதத்தில், “தகுந்த நெறிமுறைகளுடன் செயல்படும் தேசிய விருது வழங்கும் விழாவைப் பற்றி உரிய முறையில் எங்களிடம் தெரிவிக்காத நிகழ்வு எங்களை ஏமாற்றியது போல உணரச் செய்துள்ளது. மேலும் தேசிய விருது வழங்கும் விழாவின் 65 வருட பாரம்பரியத்தை சில நிமிடங்களில் கேள்விக்குள்ளாக்கியுள்ளதும் துருதிஷ்டவசமான செயல். எங்கள் மனக்குறையை போக்க ஒரு பதில் கிடைக்காத சூழ்நிலையில் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்க நாங்கள் விரும்பவில்லை. இதற்காக இந்த விழாவை கலைத்துறையினர் புறக்கணிக்கின்றோம் என கருத்தில் கொள்ள தேவையில்லை.” என்று தெரிவித்துள்ளனர்.

Related News

2541

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

மே 15 ஆம் தேதி வெளியாகும் ‘எக்ஸாம்’ (Exam) தொடர்!
Monday April-27 2026

வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...

Recent Gallery