Latest News :

’குந்தி’ பாடல்களை வெளியிட்ட டி.ராஜேந்தர்!
Saturday May-05 2018

அன்னை திரைக்களம் சார்பில் மே.கோ.உலகேசு குமார், மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இணைந்து தயாரிக்க, எஸ்.எஸ்.எப் டிவி வழங்கும் படம் ‘குந்தி’.

 

பூர்ணா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோவாக அபினவ் நடித்திருக்கிறார். ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அபிமன்யூ சிங், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் பேபி தன்வி, பேபி கிருத்திகா இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

 

கர்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு யஜமன்யா இசையமைத்திருக்கிறார். வலங்கைமான், நூர்தின், முருகானந்தம், வள்ளுவர் தேவன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். எஸ்.எஸ்.எப் டிவி காளிராஜ், சந்திரபிரகாஷ் ஆகியோர் எடிட்டிங் செய்திருக்கிறார். பண்ணா ராயல் இயக்கியிருக்கிறார். வசனம் மற்றும் ஒருங்கிணைப்பு பணியை ஏ.ஆர்.கே.ராஜராஜா கவனித்துள்ளார்.

 

அதிரடி திகில் படமாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலரை இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்திர் சமீபத்தில் வெளியிட்டார். வெளியான ஒரு சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் இந்த டிரைலரை பார்த்துள்ளனர். படம் விரைவில் வெளியாக உள்ளது.

Related News

2551

’படையாண்ட மாவீரா’ படத்தை வீழ்த்த பலர் மறைமுகமாக செயல்படுகிறார்கள் - இயக்குநர் வ.கெளதமன் வருத்தம்
Wednesday September-10 2025

வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...

’பாம்’ படம் மூலம் காமெடியில் கலக்க வரும் அர்ஜுன் தாஸ்!
Monday September-08 2025

’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...

Recent Gallery